தாயே வரமருள்வாயே

அம்மா என்றழைத்தாலே ஆனந்தமே

ஆண்டவன் எனக்களித்த அவதாரமே

இன்னல்கள் நிறைந்த அந்நாளில்

ஈன்றாலே எனை ஒரு திரு நாளில்


உலகினில் உன்னைப் போல் ஒருவருண்டோ? என

ஊக்கத்தால் எனை உயர்த்தியவள் அவளன்றோ ?

எந்திரமாய் எ
க்காக உழைத்தாளே

ஏணியாகி எனை உயர்த்தி தான் மகிழ்ந்தாளே


ஐயமின்றி வாழ வழி வகுத்தாளே

ஒற்றுமையாய் எந்நாளும் வாழ் என்றாளே

ஓடாக எனை அனு தினமும் காத்தாளே

ஔடதங்கள் கொடுத்து எனைப் பாதுகாத்தாளே


உடல் கொடுத்தாய் உயிர்க் கொடுத்தாய்

மொழிக் கொடுத்தாய் விழிக் கொடுத்தாய்

வாழ வழிக் கொடுத்தாய் --- அம்மா

எதைக் கொடுப்பேன் இன்று நானுனக்கு


பணம் தரவா பழம் தரவா

பொருள் தரவா புதுப் புடவைத்தான் தரவா

எனக்குத் தெரியும் என் அம்மா

என்னிடம் நீ எதிர்பார்ப்பது எதுவென்று


பொன்னல்ல புகழல்ல பொருளல்ல

ஓடும் இந்த எந்திர வாழ்வில்

ஒரு பொழுதாவது கனிவோடு

உன்னோடு நான் பேசுவேனா? என்று


உன் கண்ணின் இமையென எனைக் காத்தாயே

ஒரு பொழுதென்ன தாயே

ஓராயிரம் பொழுது உன்னிடம் பேச

நீ எனக்கு வரமருள்வாயே

சிரம் புறம் சாய்ந்ததே

ஓடும் வண்டியில்


ஓடி ஏறியபின்


உள்ளே செல்ல


மனமில்லையே


பொக்கை வாய்க்


கிழவ னங்கே


போதித்தாலும்


பேதையின் பார்வையில்


போதை யேறி


பேத
லித்ததே மனம்


உள்ளே செல்ல


ஆங்கே வந்த மேக நீர்


வேகமாக எனை உள்ளே


செல்லத் தூண்டியதே


பொக்கையும் கெகேவென


எனைக் கண்டு சிரித்ததே


என் சிரம் புறம் சாய்ந்ததே

கரைந்து போனேன் நான்

நீ செல்லும் போது


என் நினைவினையும்


எடுத்துச் சென்றாயே


நான் இங்குத் தனியே


நாளெல்லாம் உனையே


நினைக்கும் போதெல்லாம்


உணர்ந்தாயோ அங்கே


பின் எப்படி மேகம் கலைந்தது


மழை நின்றாலும்


கரைந்து போனேன் நான்


உன் நினைவினில்

முடியும் உன்னால் மட்டுமே

தோல்வியின் விளிம்பில்

தொட்டதெல்லாம்

துளிரவில்லையென

துவளுகின்றாயே

முகமெல்லாம் வாட்டம்

முடிவில்லாப் பயணம்

முடியுமாவென

கலங்குகின்றாயே

முகவாட்டம் களை

எறும்பைப் பார்

எங்கிருந்து வந்தது

எதையும் தாண்டும்

எதிர்ப்பாற்றலதற்கு

சிறிய தோல்விக்கே

சிதறிவிடாதே

சிறிய நம்பிக்கைப் பூவினை

சித்தத்தில் சேர்த்துவிடு

திரும்பிப் பார்

உனக்கு ஒப்பார்

ஒருவர் இருப்பார்

எனத் தெரியவில்லை

எனதருமை நண்பா

முன்னே
ப் பார்

முடியாதது ஏதுமில்லை

முடியும் உன்னால் மட்டுமே

முடிவுடன் தொடங்கிவிடு

முதலிடு நம்பிக்கையை

முழு உழைப்பையும் சிந்திவிடு

முடிவில் அறுவடை செய்வாய்

முதல் வெற்றியை

முன்னேறும் வழிதனை

முக்கிய செய்தியாய்

முழங்கிட்டேன்

முயன்றுப் பார்

முயற்சி திருவினையாக்கும்

தவக் கோலம்

ஓடும் வரை ஓடு

ஆடும் வரை ஆடு

பாடும் வரை பாடு

போகும் வரை ஓடு ஆடு பாடு


அழுதே பிறக்கும் மானிடா

அழுகப் போவதும் நீயடா

அழவைப்பார் உனை சிலரடா

அவரழுகப்போவதும் இம்மண்ணிலடா


மண்ணில் நிலைப்பதோ சிலகாலம்

அறியா மானிடர் புரிவதோ மர்மஜாலம்

வீணாக செல்வதோ பொற்காலம்

அவரென்றும் பெற முடியா தவக்கோலம்