தாயே வரமருள்வாயே

அம்மா என்றழைத்தாலே ஆனந்தமே

ஆண்டவன் எனக்களித்த அவதாரமே

இன்னல்கள் நிறைந்த அந்நாளில்

ஈன்றாலே எனை ஒரு திரு நாளில்


உலகினில் உன்னைப் போல் ஒருவருண்டோ? என

ஊக்கத்தால் எனை உயர்த்தியவள் அவளன்றோ ?

எந்திரமாய் எ
க்காக உழைத்தாளே

ஏணியாகி எனை உயர்த்தி தான் மகிழ்ந்தாளே


ஐயமின்றி வாழ வழி வகுத்தாளே

ஒற்றுமையாய் எந்நாளும் வாழ் என்றாளே

ஓடாக எனை அனு தினமும் காத்தாளே

ஔடதங்கள் கொடுத்து எனைப் பாதுகாத்தாளே


உடல் கொடுத்தாய் உயிர்க் கொடுத்தாய்

மொழிக் கொடுத்தாய் விழிக் கொடுத்தாய்

வாழ வழிக் கொடுத்தாய் --- அம்மா

எதைக் கொடுப்பேன் இன்று நானுனக்கு


பணம் தரவா பழம் தரவா

பொருள் தரவா புதுப் புடவைத்தான் தரவா

எனக்குத் தெரியும் என் அம்மா

என்னிடம் நீ எதிர்பார்ப்பது எதுவென்று


பொன்னல்ல புகழல்ல பொருளல்ல

ஓடும் இந்த எந்திர வாழ்வில்

ஒரு பொழுதாவது கனிவோடு

உன்னோடு நான் பேசுவேனா? என்று


உன் கண்ணின் இமையென எனைக் காத்தாயே

ஒரு பொழுதென்ன தாயே

ஓராயிரம் பொழுது உன்னிடம் பேச

நீ எனக்கு வரமருள்வாயே
4 Responses

  1. Tamilparks Says:

    அருமையான கவிதை, தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டம் வலையிலும் தங்கள் கவிகளை வெளியிட ஆவலாக உள்ளோம்.. http://tamilparks.50webs.com


  2. தாராளமாக வெளியிடுங்கள்
    எனக்கு சம்மதமே


  3. Kannan Says:

    சிறந்த கவிதை


Post a Comment