காணக் கிடைக்காத பொக்கிஷம்


விண்ணை முட்டின

கரகோஷங்கள்

இது வரை

சாதிக்காததை


சாதித்தற்காக

சாதனையாளர்

பட்டத்திற்காக என் பெயர்

அறிவிக்கப்பட்டவுடன்


பரிசினைப் பெற்ற

மகிழ்ச்சியில்

முகமெங்கும் ஆயிரம்

விளக்குகளின் வெளிச்சம்


ஆரவாரங்கள்

அடங்கும் முன்

மெதுவாக பின்னோக்கி

பார்க்கின்றேன்


நீ எங்கே உருப்படப் போறே

எதற்கும்

லாயக்கில்லாதவனே

வெட்டிப் பயலே .......


ஆயிரம் அர்ச்சனைகளை

அதிகாலை முதல்

நடுநிசி வரை

தினமும் கேட்டே


புடம் போட்ட இரும்பாய்

மாறியுள்ளது

பூப்போன்ற

என் மனம்ஓரிடத்தில் உபயோகமற்றவனாகவும்

வேறிடத்தில்

காணக் கிடைக்காத

பொக்கிஷமாக
வும் நான்

வெளிச்சத்தைத் தேடி


வெளிச்சத்தைத் தேடி


வெட்டவெளியில்


வெகு நாளாகத் தேடுகிறேன்


வேதனைத் தான் மிச்சம் .
இருள் சூழும் உலகில்


என்னையும் படைத்து


இவ்வுலகில் எனை


இறக்கியதன் காரணமறியேன்.
எனை சூழ்ந்த மனிதர்கள்


என் மேல் இரக்கங் கொண்டு


என் கைப் பற்றி வழி நடத்தும்


என் பயண தூரம் அறியேன் .
ஏழு வண்ணங்கொண்டதாம்


எழிற் வானவில் வானில்


எழும்போதெல்லாம்


என்னிடம் பகின்றென்ன பயன்.
அடுக்கடுக்காக நிறங்களை சொல்லி


ஆசையைத் தான் தூண்டுபவரே


ஆரேனும் அவ்வண்ணமதை நான்


அண்மையில் காண வழி சொல்வீரோ
தாயையும் தந்தையையும்


தரணியில் வாழும் மற்றோரையும்


தாமதமின்றி நான் காணும் நாள்


எந்நாளோ அறியேன் அறிவீரோ நீர்

முக வரியை முன்னெடுத்து வா

உன் வரவை எண்ணி


ஓரத்துப் பார்வையில்


ஈர மனதுடன்


ஒவ்வொரு நிமிடமும்


உனக்காகவே காத்திருக்கின்றேன்உள்ளத்துப் பூக்கள்


உலா வரும் சமயங்களில்


உன் நினைவலைகளே


என்னுள் ஜீவனை


ஒளிர்விக்கின்றதுநீ இல்லாத சமயங்களிலும்


என்னுள் ரசவாத


மாற்றங்களை


நீ நிகழ்த்துகின்றாயே


நீ என்ன மந்திரவாதியாஉன் புன்னகைப் பூக்களை


என்னிடம் விட்டுச் சென்றதால்


என் புன்னகை வங்கியில்


சேமிப்பு அதிகமாகிவிட்டிருக்கின்றதுபற்று வரவு


இரண்டும் நிகழ்ந்தால் தானே


பரிவர்த்தனை முற்றுப் பெறும்


என் சிந்தாத சிரிப்புத்துளிகளை


சீக்கிரம் உன்னுள் பதிய வாமுற்றுப் பெறாத


என்பயணத்திற்கு


முற்றுப் புள்ளி வைக்க


முக வரியை முன்னெடுத்து வா

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ

நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே

ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது

ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ


தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது

தடம் புரண்டு போனா அது தப்புடா

சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது

சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா


வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது

கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா

நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு

வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

என்னிடமிருந்து வெகு தூரம் விலகிவிட்டாய்

எதைக்கண்டு என்னிடமிருந்து பிரிந்தாய்

எப்போதும் போலவே தான் நானிருக்கின்றேன்

எப்படி இப்படி மாறினாய் என வியக்கின்றேன்


அறிமுகம் ஆனப் பொழிதிலிருந்து இதுவரை

நம்முள் பிறந்ததில்லையே எதிர்மறை

ஆண்டுகள் பல கடந்து அந்நியோன்னியம்

ஆகர்ஷ நிலை வந்த பின்பு அனிச்சமானதேன்


இயற்கையை இயல்பாய் மதித்த மனிதா

இடம் மாறி தடம் புரண்டு செயலறியா

இடர் தந்து இயற்கை வளங்களை அழிக்கின்றாயே

நான் வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

நீ , நான் , நாம்

துரித கதியில் தான் ஓடுகின்றது வாழ்க்கை

துளி கூட இடைவெளி இல்லாத செயல்கள்

தூரிகைகள் வரைந்த கனவுகள் முழுவதும்

தூரமாய் போன தேனோ இன்றுஒரே வீட்டில் தான் வாழக்கை ஒரே குடும்பம் தான்

ஒரே எண்ணோட்டம் தான் வியாபித்திருந்தாலும்

ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு

ஒவ்வொரு மணித்தியாலமும் கரைவதேன்நீயும் நானும் நாமாகி பலவருடமாகியும்

நீங்கா நினைவுகள் நம்முள் பொங்கியடங்கி

நீர்த்து போனதேனோ வார்த்தைகள்

நிஜங்கள் நிழலில் மறைந்து வாழ்வதேனோ

நிலாச் சோறு

இடுப்பினில் என்னைச் சுமந்தபடி

இரவினில் எழில் நிலவினைக் காட்டி

அதோ பார்  நிலவினில் பாட்டி 

வடை சுடுகிறாளென சோற்றினை வாயிலூட்டி வயிற்றுப் பசியினை நீக்கி எனையாளாக்கிய

என்னருமைத் தாயே அந்த நிலாச் சோறு

இயந்திர வாழ்க்கையில் இயங்கும்

குழந்தைகளுக்கு எட்டாச் சோறானது ஏன்?
                   

சுகமான தோல்விதோற்பது சுகம்

என் இனிய தந்தையின்

வாதத்தில்தோற்பது சுகம்

என் இனிய தாயின்

கண்டிப்பில்தோற்பது சுகம்

என் இனிய ஆசானின்

அறிவில்தோற்பது சுகம்

என் இனிய நண்பனின்

விவாதத்தில்தோற்பது சுகம்

என் இனிய மனைவியின்

ஊடலில்தோற்பது சுகம்

என் இனிய மழலையின்

விளையாட்டில்

எனது பயணம்

என்னில் ஏதோ ஆனந்தமே

எனக்குள் கண்டேன் ஏகாந்தமே

எங்கே இருக்கிறேன் நானே

என அறியாது திகைக்கிறேனேஅவ்வப்போது எனக்குள்ளே

ஏதோ வந்து சேருகிறதே

என்னவென்று அறியேனே

அதில்லாமல் தளர்கிறேனேபலப் பல குரல்கள்

அடிக்கடிக் கேட்க

அதிகமாகக் கேட்பது

ஒரு குரல் மட்டுமேஅந்தக் குரலும்

எனக்கு விருப்பமான

மிக நெருக்கமான

குரலாயிருக்கிறதேசப்தமான பயணங்களுக்கிடையிலே

எனது பயணம் சப்தமின்றி

நிசப்தமாகவும் சில சமயங்களிலே

நீண்டுத் தொடர்கிறதேஎனை , ஏதோ

அழுத்தும் போதெல்லாம்

விருப்பமான அக்குரல்

சன்னமாகக் கேட்கிறதேநான் தான், உன் அம்மா

நீ தான் என் செல்லம்

இது உன் அப்பா

அது தாத்தா , பாட்டி


இது அண்ணன்

அது அக்காவென

பல குரல்களுக்கேற்ப

அறிமுகம் செய்கிறதேஎன்னாயிற்று இன்று

நிதமும் கேட்கும்

குரல்களுக்கிடையே கேட்காத

குரல்களும் பயணிக்கிறதேசரிகின்றேன் , சரிகின்றேன்

எனது விருப்பக் குரல்

இன்று முற்றிலும்

வித்தியாசமாக ஒலிக்கின்றதே


இதென்னக் கூசுகிறதே

என்னைச் சுற்றிலும் பலர்

எதையோ என்மேல் அழுத்தி

தலைகீழாகப் பிடித்தேபின்னால் தட்ட , தட்ட

வலியால் நான் ம் ம் ம் மாவென

சுற்றி இருப்பவர் இது உன்

அம்மாவென அறிமுகம் செய்யஎனக்குப் பிடித்த அந்தக் குரல்

செல்லமென எனையழைத்து

தொட்டதுமே மகிழ்ந்தேனே

புது நிலையை அடைந்தேனே

நீயின்றி விடியாதே

அன்பை அடகு வைத்து

அதிக பொருள் நாடி

அயல் நாட்டில்

அடைக்கலமடைந்தாரே


அனு தினமும் எனை

உச்சி முகர்ந்து அன்பின்

உச்சத்தில் அமர்த்திய

எனதருமை அப்பா


உன்னோடு இருந்த

ஒவ்வொரு நாளும்

தித்தித்ததே மனம்

சித்தித்ததே என் எண்ணம்


என் அப்பா, ஏன் அப்பா

இணை பிரிந்தாய்

எனை பிரிந்தாய்

ஏக்கத்தால் இருவருமே


உருகுகிறோமே

உன் பிரிவில்

ஊமையாய் மனதினுள்

உதிரம் உறையவே


நிரந்தரமாய் வாராதா

வருடத்தில் ஒரு முறை

நீ எடுக்கும் பணி விடுப்பு

என ஏங்காத நாள் இல்லை


நீ தானே , நீ தானே

எங்கள் உலகம்

நீயின்றி விடியாதே

எங்களுக்கு ஒரு நாளும்