திரும்பிப் பார்க்கிறேன்
10:07 AM
அது ஒரு கனாக்காலம்
அன்று புத்தகங்களை
மட்டுமா சுமந்தேன்
நெஞ்சைத் தொட்டுச்சென்ற
நிழலானவளையும்
அல்லவா சுமந்தேன்
காலம் உருண்டது
கனவுகள் கலைந்தது
நீர்த்து போனதென் உறவுகள்
அதோ அங்கே சுமைகளாய்
தூசிகளுக்கு இடையே
“புதைந்து கிடக்கிறது ”
புத்தகங்கள் மட்டுமல்ல
நிறைவேறாமல் போன
என் கனவுகளும் தான்
கானல் நீரானவளை
நினைக்கும் போதெல்லாமொரு
சன்னமான குரல் தடுக்கிறது
சன்னமான குரலுக்கிசைந்தே
சலனமின்றி “ஓடுகிறதென் ”
சம்சார சாம்ராஜ்யம்
அன்று புத்தகங்களை
மட்டுமா சுமந்தேன்
நெஞ்சைத் தொட்டுச்சென்ற
நிழலானவளையும்
அல்லவா சுமந்தேன்
காலம் உருண்டது
கனவுகள் கலைந்தது
நீர்த்து போனதென் உறவுகள்
அதோ அங்கே சுமைகளாய்
தூசிகளுக்கு இடையே
“புதைந்து கிடக்கிறது ”
புத்தகங்கள் மட்டுமல்ல
நிறைவேறாமல் போன
என் கனவுகளும் தான்
கானல் நீரானவளை
நினைக்கும் போதெல்லாமொரு
சன்னமான குரல் தடுக்கிறது
சன்னமான குரலுக்கிசைந்தே
சலனமின்றி “ஓடுகிறதென் ”
சம்சார சாம்ராஜ்யம்
Post a Comment