நெருங்கிப் பழகாதே நெஞ்சமே
7:00 PM
நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ
நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே
ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது
ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ
தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது
தடம் புரண்டு போனா அது தப்புடா
சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது
சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா
வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது
கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடாநல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது
கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு
கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு
good