ஒரு ஐநூறு ரூபா
5:48 PM
ஒன்னாம் வகுப்பு முதலே
ஒன்னாம் தரத்திலே
மதிப்பெண் எடுத்து
மகிழ்ச்சியாத்தான் படிச்சேனே
ஆயிரத்து இருநூறுக்கு
ஆயிரத்து நூறெடுத்து
ஆசையாத்தான் மேலேபடிக்க
தொழிற்பயிற்சியில் சேர்ந்தேனே
பதினாறாயிரம் ரூபாக்கட்டி
பேரை பதிஞ்சுப் போனாரே அப்பா
தேர்வு வரும் வேளையிலே
ஒரு ஐநூறு ரூபா இல்லைன்னாரே
ஊரிலே குடிசை
பிரிச்சி போட்டிருக்காம்
கைக்காசு அதுக்கே
சரியாயிடுச்சாம்
சித்தியைக் கேளுன்னாங்க
சித்தியோ பொட்டை
சிறுக்கிக்கு எதுக்கு
மேல்படிப்பு என்றாக
படிக்கிற இடத்திலே
காசுக் கட்டலைனா
தேர்வுக்கு வராம
ஊருக்கே போன்னாங்க
ஊருக்குத் திரும்பியே
நானும் உட்கார்ந்திருக்கேனே
புதிசா வேய்ஞ்ச ஓலை ஓட்டை
வழியாவது உதவி கிடைக்குமான்னு
Post a Comment