ஒரு ஐநூறு ரூபா






ஒன்னாம்
வகுப்பு முதலே

ஒன்னாம் தரத்திலே

மதிப்பெண் எடுத்து

மகிழ்ச்சியாத்தான் படிச்சேனே



ஆயிரத்து இருநூறுக்கு

ஆயிரத்து நூறெடுத்து

ஆசையாத்தான் மேலேபடிக்க

தொழிற்பயிற்சியில் சேர்ந்தேனே



பதினாறாயிரம் ரூபாக்கட்டி

பேரை பதிஞ்சுப் போனாரே அப்பா

தேர்வு வரும் வேளையிலே

ஒரு ஐநூறு ரூபா இல்லைன்னாரே



ஊரிலே குடிசை

பிரிச்சி
போட்டிருக்காம்

கைக்காசு அதுக்கே

சரியாயிடுச்சாம்



சித்தியைக் கேளுன்னாங்க

சித்தியோ பொட்டை

சிறுக்கிக்கு
எதுக்கு

மேல்படிப்பு என்றாக



படிக்கிற இடத்திலே

காசுக் கட்டலைனா

தேர்வுக்கு வராம

ஊருக்கே போன்னாங்க



ஊருக்குத் திரும்பியே

நானும்
உட்கார்ந்திருக்கேனே

புதிசா வேய்ஞ்ச ஓலை ஓட்டை

வழியாவது உதவி கிடைக்குமான்னு


காணக் கிடைக்காத பொக்கிஷம்


விண்ணை முட்டின

கரகோஷங்கள்

இது வரை

சாதிக்காததை


சாதித்தற்காக

சாதனையாளர்

பட்டத்திற்காக என் பெயர்

அறிவிக்கப்பட்டவுடன்


பரிசினைப் பெற்ற

மகிழ்ச்சியில்

முகமெங்கும் ஆயிரம்

விளக்குகளின் வெளிச்சம்


ஆரவாரங்கள்

அடங்கும் முன்

மெதுவாக பின்னோக்கி

பார்க்கின்றேன்


நீ எங்கே உருப்படப் போறே

எதற்கும்

லாயக்கில்லாதவனே

வெட்டிப் பயலே .......


ஆயிரம் அர்ச்சனைகளை

அதிகாலை முதல்

நடுநிசி வரை

தினமும் கேட்டே


புடம் போட்ட இரும்பாய்

மாறியுள்ளது

பூப்போன்ற

என் மனம்



ஓரிடத்தில் உபயோகமற்றவனாகவும்

வேறிடத்தில்

காணக் கிடைக்காத

பொக்கிஷமாக
வும் நான்

வெளிச்சத்தைத் தேடி


வெளிச்சத்தைத் தேடி


வெட்டவெளியில்


வெகு நாளாகத் தேடுகிறேன்


வேதனைத் தான் மிச்சம் .




இருள் சூழும் உலகில்


என்னையும் படைத்து


இவ்வுலகில் எனை


இறக்கியதன் காரணமறியேன்.




எனை சூழ்ந்த மனிதர்கள்


என் மேல் இரக்கங் கொண்டு


என் கைப் பற்றி வழி நடத்தும்


என் பயண தூரம் அறியேன் .




ஏழு வண்ணங்கொண்டதாம்


எழிற் வானவில் வானில்


எழும்போதெல்லாம்


என்னிடம் பகின்றென்ன பயன்.




அடுக்கடுக்காக நிறங்களை சொல்லி


ஆசையைத் தான் தூண்டுபவரே


ஆரேனும் அவ்வண்ணமதை நான்


அண்மையில் காண வழி சொல்வீரோ




தாயையும் தந்தையையும்


தரணியில் வாழும் மற்றோரையும்


தாமதமின்றி நான் காணும் நாள்


எந்நாளோ அறியேன் அறிவீரோ நீர்

முக வரியை முன்னெடுத்து வா

உன் வரவை எண்ணி


ஓரத்துப் பார்வையில்


ஈர மனதுடன்


ஒவ்வொரு நிமிடமும்


உனக்காகவே காத்திருக்கின்றேன்



உள்ளத்துப் பூக்கள்


உலா வரும் சமயங்களில்


உன் நினைவலைகளே


என்னுள் ஜீவனை


ஒளிர்விக்கின்றது



நீ இல்லாத சமயங்களிலும்


என்னுள் ரசவாத


மாற்றங்களை


நீ நிகழ்த்துகின்றாயே


நீ என்ன மந்திரவாதியா



உன் புன்னகைப் பூக்களை


என்னிடம் விட்டுச் சென்றதால்


என் புன்னகை வங்கியில்


சேமிப்பு அதிகமாகிவிட்டிருக்கின்றது



பற்று வரவு


இரண்டும் நிகழ்ந்தால் தானே


பரிவர்த்தனை முற்றுப் பெறும்


என் சிந்தாத சிரிப்புத்துளிகளை


சீக்கிரம் உன்னுள் பதிய வா



முற்றுப் பெறாத


என்பயணத்திற்கு


முற்றுப் புள்ளி வைக்க


முக வரியை முன்னெடுத்து வா

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ

நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே

ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது

ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ


தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது

தடம் புரண்டு போனா அது தப்புடா

சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது

சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா


வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது

கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா

நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு

வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

என்னிடமிருந்து வெகு தூரம் விலகிவிட்டாய்

எதைக்கண்டு என்னிடமிருந்து பிரிந்தாய்

எப்போதும் போலவே தான் நானிருக்கின்றேன்

எப்படி இப்படி மாறினாய் என வியக்கின்றேன்


அறிமுகம் ஆனப் பொழிதிலிருந்து இதுவரை

நம்முள் பிறந்ததில்லையே எதிர்மறை

ஆண்டுகள் பல கடந்து அந்நியோன்னியம்

ஆகர்ஷ நிலை வந்த பின்பு அனிச்சமானதேன்


இயற்கையை இயல்பாய் மதித்த மனிதா

இடம் மாறி தடம் புரண்டு செயலறியா

இடர் தந்து இயற்கை வளங்களை அழிக்கின்றாயே

நான் வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

நீ , நான் , நாம்

துரித கதியில் தான் ஓடுகின்றது வாழ்க்கை

துளி கூட இடைவெளி இல்லாத செயல்கள்

தூரிகைகள் வரைந்த கனவுகள் முழுவதும்

தூரமாய் போன தேனோ இன்று



ஒரே வீட்டில் தான் வாழக்கை ஒரே குடும்பம் தான்

ஒரே எண்ணோட்டம் தான் வியாபித்திருந்தாலும்

ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு

ஒவ்வொரு மணித்தியாலமும் கரைவதேன்



நீயும் நானும் நாமாகி பலவருடமாகியும்

நீங்கா நினைவுகள் நம்முள் பொங்கியடங்கி

நீர்த்து போனதேனோ வார்த்தைகள்

நிஜங்கள் நிழலில் மறைந்து வாழ்வதேனோ