அடைக்கலம் தருவாயா !!சொல்லிக் கொடுத்ததும்

சொல்ல மறந்ததும்

சோலை மனதிலே

சுமையாய்
நிக்குதையா


அள்ள நினைத்ததும்

அன்பை விதைத்ததும்

அல்லி மனதிலே

அம்பாய் பாய்ந்ததையா


சின்ன வயசினில்

சிட்டு மனசுக்குள்

சித்தெறும்பொன்னு

சிக்கித் தவிக்கிதையா


கள்ளச்சிரிப் பொன்னு

கன்னங்குழி தனில்

கதகளி யாடி

கரைசேர துடிக்குதையா


அந்திக் கருக்கையில்

அஞ்சி வருகையில்

அன்பே அருகையில்

அடைக்கலம் தருவாயா