திரும்பிப் பார்க்கிறேன்

அது ஒரு கனாக்காலம்

அன்று புத்தகங்களை

மட்டுமா சுமந்தேன்நெஞ்சைத் தொட்டுச்சென்ற

நிழலானவளையும்

அல்லவா சுமந்தேன்காலம் உருண்டது

கனவுகள் கலைந்தது

நீர்த்து போனதென் உறவுகள்அதோ அங்கே சுமைகளாய்

தூசிகளுக்கு இடையே

புதைந்து கிடக்கிறதுபுத்தகங்கள் மட்டுமல்ல

நிறைவேறாமல் போன

என் கனவுகளும் தான்கானல் நீரானவளை

நினைக்கும் போதெல்லாமொரு

சன்னமான குரல் தடுக்கிறதுசன்னமான குரலுக்கிசைந்தே

சலனமின்றி ஓடுகிறதென்

சம்சார சாம்ராஜ்யம்

திறக்குமே அந்த சொர்க்கக் கதவுபீடுநடை போடுதே என் மனம் - அன்பே

உனை நான் கண்ட மறு நிமிடம்

ஆற்றங்கரையோரம் நானமர்ந்த நேரம் - அன்பே

நீயின்றி என் மனம் கொண்டதே பெரும் பாரம்


பாரிஜாத வாசம் கூந்தலோரம் பேசும் - அன்பே

மின்னல் உந்தன் சிரிப்பில் மெய்மறந்து போகும்

உந்தன்விழியோரம்உருவாகும்புது ராகம்-அன்பே

கண நேரம் என் நெஞ்சில் அது சிந்து கவி பாடும்


என் ஈர விழியோரம் - அன்பே

உன் நினைவு என்றும் ஆடும்

உன் நினைவு மறையும் நேரம் - அன்பே

என் மூச்சும் நின்று போகும்


நாம் வாழும் காலமோ குறைவு - அன்பே

நமக்குத் தேவைதானா ஒரு பிரிவு

நாம் கொள்ள வேணும் மேலும் பரிவு - அன்பே

கொண்டால் திறக்குமே அந்த சொர்க்கக் கதவு

அன்பினை விதைப்போம்


வாழ்க்கை என்பது ஒரு தரம்

அதில் எதுவுமில்லை நிரந்தரம்

பிணக்கிருந்தால் பகை வளரும்

கணக்கிலடங்கா இடர் தொடரும்


அன்பு ஒன்றே சுகம் தரும்

அதுவே நட்புக்கு பாலமிடும்

ஒருவருக்கொருவர் உதவிடுவோம்

உண்மை இதனை உணர்ந்திடுவோம்


வாழ்வது எத்தனை நாளாயிருந்தாலும்

அத்தனை நாளும் அன்பினை விதைப்போம்

எத்தனை இடர் நமைத் தொடர்ந்தாலும்

பிரியோம் இணை பிரியோம் ஒரு நாளும்

ஓலை வீடு


ஓலை வீட்டில்

ஒன்பது ஓட்டைகள்

வீட்டின்உள்ளே

காய்ந்த மட்டைகள்


இவர்தம்சொத்தோ

கிழிந்த சட்டைகள்

என்று தணியும்

இவர்தம்வேட்கைகள்


வேலை கிடைத்தால்
எரியும் விறகுகள்
இல்லையேல் அடுப்பில்
துயிலும் பூனைகள்

காய்த்த மரம்

கல்லடி படும்

காய்ந்த கூட்டம்

சொல்லடி படும்


அடங்கி வாழ்ந்தோம்

பல தலை முறை

கிடைத்த தெல்லாம்

வெறுங் குறை


துடித்து எழுவோம்

இம் முறை

வெற்றிக் கொள்வோம்

இக் கயவரை