நீயின்றி விடியாதே

அன்பை அடகு வைத்து

அதிக பொருள் நாடி

அயல் நாட்டில்

அடைக்கலமடைந்தாரே


அனு தினமும் எனை

உச்சி முகர்ந்து அன்பின்

உச்சத்தில் அமர்த்திய

எனதருமை அப்பா


உன்னோடு இருந்த

ஒவ்வொரு நாளும்

தித்தித்ததே மனம்

சித்தித்ததே என் எண்ணம்


என் அப்பா, ஏன் அப்பா

இணை பிரிந்தாய்

எனை பிரிந்தாய்

ஏக்கத்தால் இருவருமே


உருகுகிறோமே

உன் பிரிவில்

ஊமையாய் மனதினுள்

உதிரம் உறையவே


நிரந்தரமாய் வாராதா

வருடத்தில் ஒரு முறை

நீ எடுக்கும் பணி விடுப்பு

என ஏங்காத நாள் இல்லை


நீ தானே , நீ தானே

எங்கள் உலகம்

நீயின்றி விடியாதே

எங்களுக்கு ஒரு நாளும்