காணக் கிடைக்காத பொக்கிஷம்


விண்ணை முட்டின

கரகோஷங்கள்

இது வரை

சாதிக்காததை


சாதித்தற்காக

சாதனையாளர்

பட்டத்திற்காக என் பெயர்

அறிவிக்கப்பட்டவுடன்


பரிசினைப் பெற்ற

மகிழ்ச்சியில்

முகமெங்கும் ஆயிரம்

விளக்குகளின் வெளிச்சம்


ஆரவாரங்கள்

அடங்கும் முன்

மெதுவாக பின்னோக்கி

பார்க்கின்றேன்


நீ எங்கே உருப்படப் போறே

எதற்கும்

லாயக்கில்லாதவனே

வெட்டிப் பயலே .......


ஆயிரம் அர்ச்சனைகளை

அதிகாலை முதல்

நடுநிசி வரை

தினமும் கேட்டே


புடம் போட்ட இரும்பாய்

மாறியுள்ளது

பூப்போன்ற

என் மனம்ஓரிடத்தில் உபயோகமற்றவனாகவும்

வேறிடத்தில்

காணக் கிடைக்காத

பொக்கிஷமாக
வும் நான்

வெளிச்சத்தைத் தேடி


வெளிச்சத்தைத் தேடி


வெட்டவெளியில்


வெகு நாளாகத் தேடுகிறேன்


வேதனைத் தான் மிச்சம் .
இருள் சூழும் உலகில்


என்னையும் படைத்து


இவ்வுலகில் எனை


இறக்கியதன் காரணமறியேன்.
எனை சூழ்ந்த மனிதர்கள்


என் மேல் இரக்கங் கொண்டு


என் கைப் பற்றி வழி நடத்தும்


என் பயண தூரம் அறியேன் .
ஏழு வண்ணங்கொண்டதாம்


எழிற் வானவில் வானில்


எழும்போதெல்லாம்


என்னிடம் பகின்றென்ன பயன்.
அடுக்கடுக்காக நிறங்களை சொல்லி


ஆசையைத் தான் தூண்டுபவரே


ஆரேனும் அவ்வண்ணமதை நான்


அண்மையில் காண வழி சொல்வீரோ
தாயையும் தந்தையையும்


தரணியில் வாழும் மற்றோரையும்


தாமதமின்றி நான் காணும் நாள்


எந்நாளோ அறியேன் அறிவீரோ நீர்