முக வரியை முன்னெடுத்து வா

உன் வரவை எண்ணி


ஓரத்துப் பார்வையில்


ஈர மனதுடன்


ஒவ்வொரு நிமிடமும்


உனக்காகவே காத்திருக்கின்றேன்உள்ளத்துப் பூக்கள்


உலா வரும் சமயங்களில்


உன் நினைவலைகளே


என்னுள் ஜீவனை


ஒளிர்விக்கின்றதுநீ இல்லாத சமயங்களிலும்


என்னுள் ரசவாத


மாற்றங்களை


நீ நிகழ்த்துகின்றாயே


நீ என்ன மந்திரவாதியாஉன் புன்னகைப் பூக்களை


என்னிடம் விட்டுச் சென்றதால்


என் புன்னகை வங்கியில்


சேமிப்பு அதிகமாகிவிட்டிருக்கின்றதுபற்று வரவு


இரண்டும் நிகழ்ந்தால் தானே


பரிவர்த்தனை முற்றுப் பெறும்


என் சிந்தாத சிரிப்புத்துளிகளை


சீக்கிரம் உன்னுள் பதிய வாமுற்றுப் பெறாத


என்பயணத்திற்கு


முற்றுப் புள்ளி வைக்க


முக வரியை முன்னெடுத்து வா

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ

நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே

ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது

ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ


தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது

தடம் புரண்டு போனா அது தப்புடா

சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது

சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா


வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது

கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா

நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு

வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

என்னிடமிருந்து வெகு தூரம் விலகிவிட்டாய்

எதைக்கண்டு என்னிடமிருந்து பிரிந்தாய்

எப்போதும் போலவே தான் நானிருக்கின்றேன்

எப்படி இப்படி மாறினாய் என வியக்கின்றேன்


அறிமுகம் ஆனப் பொழிதிலிருந்து இதுவரை

நம்முள் பிறந்ததில்லையே எதிர்மறை

ஆண்டுகள் பல கடந்து அந்நியோன்னியம்

ஆகர்ஷ நிலை வந்த பின்பு அனிச்சமானதேன்


இயற்கையை இயல்பாய் மதித்த மனிதா

இடம் மாறி தடம் புரண்டு செயலறியா

இடர் தந்து இயற்கை வளங்களை அழிக்கின்றாயே

நான் வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

நீ , நான் , நாம்

துரித கதியில் தான் ஓடுகின்றது வாழ்க்கை

துளி கூட இடைவெளி இல்லாத செயல்கள்

தூரிகைகள் வரைந்த கனவுகள் முழுவதும்

தூரமாய் போன தேனோ இன்றுஒரே வீட்டில் தான் வாழக்கை ஒரே குடும்பம் தான்

ஒரே எண்ணோட்டம் தான் வியாபித்திருந்தாலும்

ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு

ஒவ்வொரு மணித்தியாலமும் கரைவதேன்நீயும் நானும் நாமாகி பலவருடமாகியும்

நீங்கா நினைவுகள் நம்முள் பொங்கியடங்கி

நீர்த்து போனதேனோ வார்த்தைகள்

நிஜங்கள் நிழலில் மறைந்து வாழ்வதேனோ