ஓலை வீடு


ஓலை வீட்டில்

ஒன்பது ஓட்டைகள்

வீட்டின்உள்ளே

காய்ந்த மட்டைகள்


இவர்தம்சொத்தோ

கிழிந்த சட்டைகள்

என்று தணியும்

இவர்தம்வேட்கைகள்


வேலை கிடைத்தால்
எரியும் விறகுகள்
இல்லையேல் அடுப்பில்
துயிலும் பூனைகள்

காய்த்த மரம்

கல்லடி படும்

காய்ந்த கூட்டம்

சொல்லடி படும்


அடங்கி வாழ்ந்தோம்

பல தலை முறை

கிடைத்த தெல்லாம்

வெறுங் குறை


துடித்து எழுவோம்

இம் முறை

வெற்றிக் கொள்வோம்

இக் கயவரை
0 Responses

Post a Comment