முடியும் உன்னால் மட்டுமே

தோல்வியின் விளிம்பில்

தொட்டதெல்லாம்

துளிரவில்லையென

துவளுகின்றாயே

முகமெல்லாம் வாட்டம்

முடிவில்லாப் பயணம்

முடியுமாவென

கலங்குகின்றாயே

முகவாட்டம் களை

எறும்பைப் பார்

எங்கிருந்து வந்தது

எதையும் தாண்டும்

எதிர்ப்பாற்றலதற்கு

சிறிய தோல்விக்கே

சிதறிவிடாதே

சிறிய நம்பிக்கைப் பூவினை

சித்தத்தில் சேர்த்துவிடு

திரும்பிப் பார்

உனக்கு ஒப்பார்

ஒருவர் இருப்பார்

எனத் தெரியவில்லை

எனதருமை நண்பா

முன்னே
ப் பார்

முடியாதது ஏதுமில்லை

முடியும் உன்னால் மட்டுமே

முடிவுடன் தொடங்கிவிடு

முதலிடு நம்பிக்கையை

முழு உழைப்பையும் சிந்திவிடு

முடிவில் அறுவடை செய்வாய்

முதல் வெற்றியை

முன்னேறும் வழிதனை

முக்கிய செய்தியாய்

முழங்கிட்டேன்

முயன்றுப் பார்

முயற்சி திருவினையாக்கும்
0 Responses

Post a Comment