வாகை சூடும் நேரமிது

வாகை சூடும் நேரமிது இரு மயில்கள்
தோகை விரித் தாடும் கால மிது
இனிக் கார்க் காலம் தான் - இதயந்தனில்
இனிய போர்க்கோலம் தான்

வானத்து மின்னல் தான் புன்னகையோ - அர்ச்சுனன்
வில் தான் இவள்தன் புருவமோ - கேள்விக் குறிதான்
வஞ்சியின் செவி மடலோ - வண்டு தான் விழியோ
வாழைதான் உடலோ , குயிலோசை தான் குரலோ

நடையினில் தவழ்ந்திடும் சலங்கையொலி
தென்றலில் மிதந்திடும் புன்னகை
யொலி
நுழைந்ததே தேவனின் மனதிலே
நங்கையோ இன்ப வெள்ளத்திலே

விழிகளுக்கிடையே மொழிகள் தூது செல்ல
இரு கரம் மெல்ல படர்ந்து கொள்ள
காதல் ஜோடி ஒன்று இன்று , மெல்ல
கவிதைகள் ஆயிரம் படைத்ததம்மா