புதுக் கோலம்

எங்கும் அழகிய மாக் கோலம் - இன்று

குங்குமச் செல்விக்கு மணக் கோலம்

பொங்கும் இசை வெள்ளம் மிதந்து வர

என் கண்மணி கொண்டாள் புதுக் கோலம்பூக்கள் சூழ பூவை வந்தாள்

இமைக்கும் விழியினில் பாக்கள் தந்தாள்

நாயகன் அருகே வந்தமர்ந்தாள்

நாணத்தில் கண்கள் சிவந்திருந்தாள்வேதங்கள் காற்றினில் முரசொலிக்க

தேவர்கள் மூவர்கள் வந்து நிற்க

வந்தவர் யாவரும் வாழ்த்துரைக்க

நாயகன் மங்கள நாண் சூடகண்ணே உன்னைக் காணக் காண

நெஞ்சில் இன்பம் பொங்குதம்மா

பெண்ணே புகுந்த வீட்டில் - நீ

புகழை வளர்க்க வேண்டும்மம்மாகணவன் செல்லும் வழியினிலே

நீயும் செல்ல வேண்டும்மம்மா

கணவன் வழி நீ நடந்தால்

என்றும் காண்பாய் திருநாளம்மா